15-18 வயதினருக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தவேண்டும்..!
கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் அதற்கான மையத்திற்கு சென்று இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கொரொனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மருத்துவத் துறையினரும், முன் களப்பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஆகியோர் முக்கிய நடவடிக்கையாக கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அறிவித்திருந்தது. மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி மாதம் பத்தாம் தேதி முதல் தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை கூறியிருந்தது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடுப்பூசி திட்டம் குறித்த விரிவான அட்டவணை இன்று அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிலருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி மட்டுமே போட வேண்டும் என அதனை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிலருக்கு மற்ற தடுப்பூசிகள் போடப்படுவதாகவும் ஆனால் தங்களுக்கு மட்டுமே அரசின் அனுமதி இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





