தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம்..!
தமிழகத்தில் 18 கட்டமாக கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரொனாவை எதிர்கொள்ள சிறந்த ஆயுதம் தடுப்பூசி நிறுத்திக் கொள்வதுதான் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மக்கள் எளிதாக தடுப்பு செலுத்திக் கொள்ள தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தி வந்தது, இந்நிலையில் நாளை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு இன்றைய மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.






