பிரபல மாலில் திடீரென இடிந்து விழுந்த சீலிங்..!
சென்னை அண்ணா நகரில் ஆறு அடுக்குகள் கொண்ட பிரபலமான மாலின் சீலிங் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த மாலில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்கம் உள்ளது. இந்த மாலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வதுண்டு.
இந்த நிலையில் சென்னையில் பெய்த கன மழையால் மானின் சீலிங் இடிந்து விழுந்தது. இதைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.





