4 முறை தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண்ணுக்கு கொரோனா..!
வெவ்வேறு நாடுகளில் நான்கு முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணுக்கு கொரொனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று இருக்கும் பொழுது அந்தந்த நாடுகளில் 4 முறை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 18ஆம் நாள் மத்தியபிரதேசம் வந்த அவர் மீண்டும் துபாய் செல்வதற்காக இன்னொரு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நான்கு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.





