--- --:--:-- --

4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை..!

3

ன மழை எதிரொலியாக சென்னை உட்பட நான்கு மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நடப்பாண்டில் அதிகளவு மழை பதிவாகி இருந்தது. சென்னையில் நேற்று நண்பகல் முதல் மழை பெய்தது.

 

தொடர்ந்து நாள் முழுவதும் கனமழை பெய்தது. மேலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

 

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரச அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon