--- --:--:-- --

ரசாயன திரவத்தை தவறுதலாக குடித்த சிறுமிக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர்..!

10

சாயன திரவத்தை தவறுதலாக குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி உடல் நலம் தேறி முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இசக்கியம்மாள் என்ற சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக துணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன திரவத்தை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

 

இதனால் உடல் நலம் நலிவுற்ற சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து தற்போது சிறுமியின் உடல் நலம் தேறிய நிலையில் பெற்றோருடன் சென்ற சிறுமி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

 

அப்பொழுது சிறுமியின் சிகிச்சைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சந்திப்பின்போது அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Right Menu Icon