வாந்தி, வயிற்றுப் போக்கால் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!
வேலூர் மாவட்டம் பெருந்துறை அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக 10க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட முதியவர் அப்பா சுவாமி நேற்று உயிரிழந்த நிலையில் இன்று மார்க்கபந்து மகாலட்சுமி தம்பதியினரின் 4 வயது மகன் உயிரிழந்திருக்கிறான். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கழிவுநீர் கலப்பதாக அதிலிருந்த மீனை பிடித்து சாப்பிட்டதால் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த கிராமத்தில் ஐந்து மருத்துவர்கள் உள்ளடக்கிய 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். இதற்கு இடையில் உயிரிழந்தவர்களின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முடிவுகள் தெரிந்த பின்னரே இறப்புக்கான காரணம் பற்றி தெரியவரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






