வேலூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..!
வேலூர் அருகே பேரணாம்பட்டு, டிடி மோட்டூர் பகுதியில் நள்ளிரவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென பெரும் சத்தம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஏற்கனவே கடந்த 29 ஆம் தேதி நில அதிர்வு ஏற்பட்டு இருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டு இருப்பதாக நிலநடுக்க மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிராம மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வேறு ஏதேனும் காரணமா என வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.






