சசிகலா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை..!
அதிமுக தொண்டர்களை குறிப்பிட்டு சசிகலா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் அந்த கட்சி நிலைமை விரைவில் மாறும், தலைநிமிரும் இது உறுதி என்று சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ சூழ்ச்சிகளையும், தடைகளையும் தாண்டி வென்றெடுத்த ஒரு மாபெரும் இயக்கம் என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். அதிமுக எந்தவித காரணமும் இல்லாமல் கால் புணர்ச்சி காரணமாக உதாசீனப்படுத்தபட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் தாங்களாகவே ஒதுங்கி கொண்டவர்கள் அனைவரும் கவலை படாமல் சிறிது காலம் பொறுத்து இருக்குமாறு சசிகலா அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து அதிமுக தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை தான் ஓய்ந்து விடாமல் உழைத்துக் கொண்டே இருக்க போவதாகவும் சசிகலா உறுதிபட தெரிவித்துள்ளார்.






