திடீரென மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோஷம்!
தமிழ்நாட்டில் இடைநிலை சுகாதார பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று காலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை தமிழக வெற்றிக் கழக அரசு மதித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது போராட்டக்காரங்கள் த.வெ.க அரசிற்கு கேள்வி எழுப்பி கோஷம் போட்டனர். அதாவது, மருத்துவ சேவை செய்யும் நாங்கள் யார்? அரசு ஊழியர்கள் நாங்கள் இல்லை, தனியார் ஊழியர் நாங்கள் இல்லை. தொழிலாளர் சட்டமும் எங்களுக்கு பொருந்தாது அப்படி என்றால் நாங்கள் யார்? மு.க.ஸ்டாலின் செய்யல… முதல்வர் செய்வாரா? என்று கேஷம் எழுப்பினர்.
இவர்களுடன் சேர்ந்து மனோ தங்கராஜும் சேர்ந்து கோஷம் எழுப்பிய நிலையில் போராட்டக்காரர்கள் திடீரென மு.க.ஸ்டாலின் செய்யல என முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கோஷம் போட்டதால் மனோ தங்கராஜுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திகைத்துபோய் நின்று கோஷம் எழுப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





