சர்வதேச விருதுக்கு தேர்வாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம்..!
தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி சர்வதேச அளவில் கோல்டன் குளோப் விருதுக்கு ஜெய் பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் நாள் ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஜெய்பீம்.
1990களில் நடைபெற்ற ஒரு உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று வரை படத்தின் மீதான எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
2021ஆம் ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.






