இந்தியாவில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி..!
இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. உலகம் முழுவதும் 29 நாடுகளில் பரவி வரும் வைரஸ் இந்தியாவிலும் வந்துள்ளது.தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகத்துக்கு வந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.






