சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வெளியாகியுள்ள தகவல்..!
கேரள சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர், மாமனார், மாமியாருக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன் என்ற சட்டக்கல்லூரி மாணவி.
வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது கணவர் மற்றும் தந்தை தாயார் என மூவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில் மூவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தனது தோழிகளுடன் பகிர்ந்து கொண்ட நிலையில் அவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டது. மோபியா பர்வீனுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் வாக்குமூலமும் விசாரணை குழுவினர் பெறப்பட்டது.






