--- --:--:-- --

விலைவாசி உயர்வை கண்டித்து டிசம்பர் 12ல் காங்கிரஸ் மெகா பேரணி..!

5

விலை உயர்வை கண்டித்து வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் பேரணி நடத்தப்படவுள்ளது. கடந்த 12ஆம் தேதி விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் இரண்டு வார விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது.

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டிசம்பர் 12ஆம் தேதி டெல்லியில் நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. பேரணி நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தாலும் இதுவரை டெல்லி அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என குறிப்பிடுகிறது.

 

12ஆம் தேதி நடைபெறும் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் உள்ளனர். உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon