குறைந்தது தங்கம் விலை..!
அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று மட்டும் தங்கம் விலை கணிசமாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,775க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,675க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.11,235க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ89,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




