பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் இருக்கும் புகைப்படம் வைரல்..!
பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
வானுயர்ந்து நிற்கும் புதிய இந்தியாவை உருவாக்க பயணத்தை தொடங்கி உள்ளோம் என்று கூறி இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் உலக நலனுக்காக அரசியலில் சில சமயங்களில் இது போன்றுசெய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.






