--- --:--:-- --

தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்ற கனவு நனவானது : முனீஸ்வர்நாத் பண்டாரி

1

தமிழ்நாட்டிற்கு வந்த போது இங்கு பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணம் தற்பொழுது நனவாகி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

 

பதவியேற்ற பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவருக்கு வரவேற்பு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்று முதல் தமிழ் கற்கத் தொடங்கி இருப்பதாகவும், வணக்கம், நன்றி ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

 

அனைவரும் ஒரு கரம் சேர்த்து பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon