தன்னை காப்பாற்றக்கோரி மருத்துவமனைக்கு ஓடி வந்த மான்..!
காயமடைந்த மான் ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஓடி வந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் தான் இந்த வியக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள வீடியோவில் மருத்துவமனைக்கு மான் ஒன்று வேகமாக ஓடி வருகிறது. கார் ஒன்று மோதியதால் காயமடைந்ததாக கருதப்படுகிறது, அந்த மான் வலியை தாங்கிக் கொண்டு ஓடி வருகிறது.
வலியை அதிகரிக்கும் விதமாக வரவேற்பறையில் உள்ள டைல்களில் ஓடி வரும் பொழுது கால் வழுக்குகிறது இருப்பினும் மீண்டும் எழுந்து எந்த பக்கம் போவது என்பதை அறியாமல் எஸ்கலேட்டரில் தாவித்தாவி இரண்டாவது தளத்தை அடைகிறது.
ஒரு வழியாக மானை பார்த்துவிட்ட மருத்துவர்கள் அதனை பிடிக்கின்றனர். ரத்தத்துடன் காணப்பட்ட அந்த மான் மயக்கம் அடைகிறது. உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளனர் என்றாலும் இறுதியில் மருத்துவர்கள் செய்ததுதான் கொடூரம். மானை காப்பாற்ற முடியாமல் கருணைக் கொலை செய்துவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





