மழைநீருடன் வரும் பாம்பு மற்றும் பூச்சிகளால் மக்கள் அச்சம்..!
திருவொற்றியூரில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.
முக்கியமாக திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான அண்ணாமலை நகர், ராஜாஜி நகர், ராஜா சண்முக நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீருடன் பாம்பு மற்றும் பூச்சிகள் வீட்டுக்குள் புகுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




