--- --:--:-- --

சீனாவில் மீண்டும் பரவும் கொரொனா..! பள்ளிகள் மூடல்..!

7

சீனாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரொனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் பல்வேறு மாகாணங்களில் கொரொனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

சீனாவின் வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீஜிங்கில் பெருமளவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

 

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவதொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon