--- --:--:-- --

மாற்றத்துக்கான விதையை மக்கள் நீதி மய்யம் போட்டிருக்கிறது : கமல்ஹாசன்

7

நதிகளை சாக்கடையாக்கியுள்ள தலைமுறையின் நிலையை மாற்றுவதற்காக மக்கள் நீதி மையம் காத்து இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி செங்கல்பட்டு மாவட்ட புனித தோமையார் ஆலயம் ஒன்றில் வேங்கைவாசல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.

 

தேர்தலில் வெற்றி பெற்ற பின் லஞ்சம் இல்லாத நிர்வாகம் மற்றும் மக்கள் சேவைகள் குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர்கள் பத்திரத்தில் கையொப்பமிட்டு இருப்பதாக அவர் காண்பித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon