கொரொனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் இந்த கதி தான்..!
உலகம் முழுவதும் கொரொனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி வேகமாக நடைபெற்று வருவதால் எல்லா நாடுகளிலும் கொரொனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி மீது போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் தடுப்பூசி போடவேண்டும் என்ற வாசகத்துடன் வண்டி வலம் வருகிறது. தடுப்பூசி போட வேண்டாம் என்கிற வாசகத்தை மேலோட்டமாக பார்த்தால் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
ஆனால் உன்னிப்பாக கவனித்தால் அது உண்மையில்லை என்பது தெரியவரும். தடுப்பூசி போட வேண்டாம் என்கிற வாசகத்தின் கீழ் பகுதியில் இறுதி சடங்கு செய்யும் நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது தடுப்பூசி போடாவிட்டால் உங்களின் இறுதி சடங்கை செய்ய நாங்கள் வருவோம் என்பதை உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.






