--- --:--:-- --

10 கிலோ கலப்பட டீத்தூள்..! பறிமுதல் செய்த அதிகாரிகள்..!

7

கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறியதாக 18 கடைகளுக்கு 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

 

கரூர் பேருந்து நிலையம் வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஆறு டீ கடைகளில் இருந்து 10 கிலோ கலப்பட டீத்தூள் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு தின்பண்டங்களை வாழை இலைகளை வைத்து விற்கவும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon