தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரங்களில் கன மழையால் நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஆரணியில் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல குடியாத்தம் அருகே தடுப்பணை நிரம்பி அதில் இருந்து உபரிநீர் ஆற்றிலும் வாய்க்காலிலும் அதிகளவில் பாய்ந்து வருகிறது. எனவே கால்வாய்களை ஒட்டிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேரத்தில் மழை பெய்துள்ளது. இந்த சூழலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்.






