கார் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு..!
சென்னை தியாகராயநகரில் கார் மோதி 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியவருக்கு பதிலாக வேறு ஒரு நபர் தான் தான் விபத்தை ஏற்படுத்தியதாக கூறி போலீசார் முன்பு ஆஜர் ஆனதால் சலசலப்பு ஏற்பட்டது.
ராயப்பேட்டையை சேர்ந்த ஜெயராமன் மனைவி சித்ரா, மகன் மற்றும் மகள் ஆகியோர் உடன் தியாகராய நகரில் உள்ள கடையில் துணி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.ரவுண்டானா அருகே செல்லும் பொழுது எதிரே வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





