--- --:--:-- --

தஞ்சையில் பேருந்து மோதி இளைஞர் பலத்த காயம்..!

7

தஞ்சை மாவட்டம் பாபநாசம் மாதா தெருவில் வசித்து வரும் இளைஞருக்கு வயது 19. இவர் கடந்த 12ஆம் தேதி தஞ்சையில் இருந்து பாபநாசம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது தஞ்சை கரந்தை சோதனைச்சாவடி அருகிலிருந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை முந்துவதற்காக முயற்சித்த பொழுது எதிர் திசையில் வந்த பேருந்து மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon