பண மோசடிப் புகாரில் கேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகளிடம் விசாரணை..!
பண மோசடிப் புகாரில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் நான்கு பேரிடம் டெல்லி காவலர்கள் சென்னையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக சுகேஷ் சந்திரசேகரை டெல்லி காவலர்கள் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள அவரது பங்களாவில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
சிறையிலிருந்து கொண்டே பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததால் அவருக்கு உதவியதாக நடிகையும், சுகேசின் பெண் தோழியுமான லீனா மரியா அதன்பிறகு அருண் முத்து, கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்திருந்தனர். இதனையடுத்து மோசடி செய்து சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.






