--- --:--:-- --

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

13

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஐந்தாம் தேதி வரை நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

 

வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றும், வரும் 5-ஆம் தேதி கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

Leave a Reply

Right Menu Icon