கங்கனா ரனாவத் நடித்த தலைவி படத்திற்கு யு சான்றிதழ்..!
ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியிருக்கும் தலைவி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தலைவி.
இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் செப்டம்பர் 10ஆம் நாள் வெளியாகிறது. இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளிக்கப்படவுள்ளது.






