ஆப்கானிஸ்தானில் இன்று தாலிபன்கள் அரசு அமையப் போகிறது..!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறி மூன்று நாட்கள் கடந்த நிலையில் அங்கு புதிய அரசை தாலிபான்கள் இன்று அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபொழுது பெண்களுக்கு எதிரான ஷரியத் சட்டத்தை அமல்படுத்தி அவர்களுக்கான உரிமைகளை தலிபான்கள் தட்டிப் பறித்தனர். இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் தலிபான்கள் கடந்த கால தவறுகளை செய்யப்போவதில்லை என்றும் மென்மையான போக்கை கடைபிடிக்க போவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
20 ஆண்டு காலத்தில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி இருக்கும் நிலையில் இன்று மதிய தொழுகைக்குப்பின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தலைவர்கள் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் புதிய அரசில் பெண்களுக்கு இடம் இருக்காது என தெரியவந்துள்ளது.






