--- --:--:-- --

பசு மாட்டின் வாலை கத்தியால் வெட்டிய 4 பேர்..!

4

திருவண்ணாமலையில் கரும்பு தோட்டத்தில் மேய்ந்த பசு மாட்டின் வாலை கத்தியால் வெட்டிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள பகுதியில் பழனிராஜ் என்பவர் வசித்து வருகிறார்.

 

இவருக்கு சொந்தமான பசுமாடு ஏழுமலை என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது சகோதரர்கள் மூன்று பேரும் சேர்ந்து பசு மாட்டின் வாலை கத்தியால் வெட்டி உள்ளனர்.

 

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon