வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு..!
வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மரினா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள மேலும் 17 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.






