மூன்று லட்சம் ரூபாயை தனக்கு தர வேண்டும் எனக்கூறி தாயை தாக்கிய மகன்..!
நாமக்கல் அருகே சேமிப்பு தொகை மூன்று லட்சம் ரூபாயை தனக்கே தர வேண்டும் என கூறி பெற்ற தாயை மகனே நடுரோட்டில் வைத்து தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. பொன்னேரி பட்டியை சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள் என்பவர் மூன்று லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார்.
இவரது கணவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு சொந்தமான நிலத்தை மகன் செல்வதற்கு எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் மூதாட்டி சேமித்து வைத்த 3 லட்சம் ரூபாயை கேட்டு சண்முகம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.






