தனிக்குடித்தனம் நடத்த கணவன் வராத ஆத்திரத்தில் இளம்பெண் தற்கொலை..!
தனிக்குடித்தனம் நடத்த கணவன் வராத ஆத்திரத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. புதுச்சேரியை அடுத்த ரெட்டியார் பாளையத்தை சேர்ந்தவர் சத்தியவாணி.
இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முனிபள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் பெங்களூருவில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.
இதனால் இருவரும் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர். செல்போனில் அவ்வப்போது கணவருடன் பேசி வந்த சத்தியவாணி தன் கணவரை தனிக்குடித்தனம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தன் பெற்றோருடன் இருந்த ஹரிபிரசாத் மனைவியின் உடலுக்கு செவிமடுக்கவில்லை.
பலமுறை கணவருக்கு எடுத்து சொல்லியும் அவர் புரிந்து கொள்ளாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் சத்தியவாணி. புதுச்சேரியிலிருந்து சித்தூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த சத்தியவாணி தன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவர் வீட்டில் இல்லை என தெரிய வரவே மாமியார் மாமனாரிடம் சொல்லி கணவரை வரவழைத்துள்ளார்.
அப்பொழுது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து கிளம்பிய சத்தியவாணி பெட்ரோல் பங்கிற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி வந்துள்ளார்.
அப்போது மாமனார் மாமியார் கணவர் முன்னிலையில் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் ஹரிபிரசாத் உடலிலும் தீ பற்றியது. இதில் உடல் முழுவதும் தீ காயம் அடைந்த சத்தியவாணி சம்பவ இடத்திலேயே பலியானார்.






