--- --:--:-- --

அரியலூர் மாவட்டத்தில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல்..!

9

அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமத்தில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

 

இதனை அடுத்து அங்கு சென்ற மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில் அதில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அந்த கிராமத்தில் உள்ள 100 பேருக்கு காய்ச்சல் மற்றும் கொரொனா பரிசோதனை மேற்கொண்டனர்.

 

அதிகாரிகள் வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா என கண்டறிந்து அதனை சீர்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 23 வயது இளம்பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அரியலூரில் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon