தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் தொற்று..! அதிர்ச்சி..!
கேரளாவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்துக் கொரொனா தடுப்பூசி முழு அளவில் பெற்று நோய் தொற்று ஏற்பட்டவர்களின் மாதிரிகள் மரபியல் பரிசோதனைக்கு அனுப்புமாறு கேரள அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த சோதனையில் தொற்று ஏற்பட நபர்களிடம் எந்த வகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மற்றவர்களின் மாதிரியை ஒப்பீட்டு பார்க்கப்படும்.
தடுப்பூசி வழங்குகிற பாதுகாப்பையும் மீறி தொற்று ஏற்படுத்தும் வகையில் கொரொனா வைரஸ் மரபணு மாற்றம் எடுத்துள்ளதா? கொரொனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த முறைக்கு வேகமாக பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் காரணமா எனவும் ஆராயப்பட உள்ளது.
கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல் டோஸ் போட்டவர்களில் 14 ஆயிரத்து 974 பேருக்கும், 2வது டோஸ் போட்டவர்களில் ஐந்தாயிரத்து 402 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.






