பிக்கப் டிராப் என்ற படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது..!
பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகிவரும் பிக்கப் டிராப் என்ற படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் போஸ்டர்கள் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் திருமணக்காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் புகைப்படம் எடுத்த போது அங்கு நடந்த காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.






