--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடல் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒப்படைப்பு..!

7

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரொனாவால் உயிரிழந்தவரின் உடல் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு கடந்த மே 19ஆம் தேதி கொரோனாவால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மே 22ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

பிணங்களை அடக்கம் செய்து விடுவோம் எனக் கூறி உறவினர்களை அனுப்பி வைத்த மருத்துவமனை ஊழியர்கள் இதற்காக லஞ்சமாக மூவாயிரம் ரூபாயை வாங்கியதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு உடலை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உடலை பெற்றுச் சென்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon