--- --:--:-- --

பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது புகார்..!

6

பண மோசடி புகாரில் நடிகர் ஆர்யா மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெர்மனியை சேர்ந்தவருடன் பிரபல நடிகர் ஆர்யா நெருங்கி பழகியதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆன்லைன் முறையில் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

 

2019ஆம் ஆண்டு சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பண மோசடி தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆர்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்தார். இரண்டு மணி நேரத்திற்கு பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேள்வி க்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon