--- --:--:-- --

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் அபராதம்..!

5

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த விதிமுறை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

மாதத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் பணம் இல்லை எனில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒயிட் லேபிள் பணம் இல்லை எனில் அந்த ஏடிஎம் மையத்திற்கு பணத்தை வினியோகம் செய்யும் வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும்.

 

சம்பந்தப்பட்ட வங்கிகள் விரும்பினால் அந்த அபராதத் தொகையினை ஒயிட் லேபிள் ஏ‌டி‌எம் நிறுவனங்களிடமிருந்து படுத்துக்கொள்ளலாம். வங்கி ஏடிஎம்களில் எவ்வளவு நேரம் பணம் இல்லை என்ற தகவலை ரிசர்வ் வங்கிக்கு மாதம்தோறும் விரிவான அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon