ஹோட்டலில் சாப்பிட்ட உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி..!
சென்னை குரோம்பேட்டையில் ஹோட்டலில் சாப்பிட்ட போது உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உணவகத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி என்பவர் நேற்று மதிய உணவு அருந்தினார். நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடும் பொழுது உணவில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர்களிடம் முறையிட்டனர். உடனே உணவகத்தில் இருந்து அனைத்து உணவையும் கொட்டியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் உணவக உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.






