அட்லி இயக்கத்தில் நடிக்கும் ஷாருக்கான்..! ஜோடி நயன்தாராவா..!
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. ராஜா ராணி போன்ற 4 வெற்றிப்படங்களை இயக்கிய அட்லி நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.
அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடை பெறும் நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்குகிறது.
அட்லியின் இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா இந்த திரைப்படத்தில் முதன் முறையாக ஷாருக்கானுக்கு நாயகியாக நடிக்கிறார்.






