--- --:--:-- --

தாயை பார்ப்பதற்காக 120 கிலோ மீட்டர் தூரம் சென்ற சிறுவன்..!

11

தாயை பார்ப்பதற்காக 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கிளம்பிய சிறுவன் போலீசார் உதவியுடன் தன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

திண்டிவனம் அடுத்த முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரகுராமன் என்பவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் தனது தாயை பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக்கொண்டு தனியாக தாயை பார்க்க சென்றுள்ளார்.

 

நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் சென்ற சிறுவனின் தகவல் அறிந்து அவனை மீட்டு போலீசார் அறிவுரைகள் கூறி தந்தையிடம் ஒப்படைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon