--- --:--:-- --

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு..!

6

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று திறக்கப்படும். கொரொனா பரவல் காரணமாக புதுச்சேரியில் திரையரங்குகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது.

 

அதன்படி கடந்த 1ஆம் தேதி வெளியான அறிவிப்பினை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் இருந்து திரைப்படங்களை திரையிட திரையரங்குகள் தயாராக உள்ளனர்.

 

தமிழகத்தில் வெளியான திரைப்படங்கள் புதுச்சேரியில் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆங்கில மொழி மாற்று திரைப்படங்கள் பழைய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon