--- --:--:-- --

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

7

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் வழிந்து ஓடியது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை 5 மணிக்கு மேல் ஆம்பூர் வெங்கடசமுத்திரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon