ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் விரைவில் வரும்..!
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்தது.
இதனை எதிர்த்து அந்த நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதனை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டு இருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வர தடை ஏதும் இல்லை என தீர்ப்பில் கூறியிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலன் முக்கியம் என்பதால் விதிமுறைகளை வகுத்து புதிய சட்டத்தை கொண்டுவர முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் கூறியிருக்கும் அமைச்சர் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.






