--- --:--:-- --

மீன் குழம்பு வைத்த ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை..!

1

மீன் குழம்பு வைத்து ஆத்திரத்தில் மனைவியை கணவன் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு மனைவி இறந்து விட்டதாக கருதி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் மாவட்டம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் குமார்.

 

குடிபோதையில் வீட்டிற்கு உணவருந்த வந்த இவர் மனைவி துர்கா மீன் குழம்பு பரிமாறியதால் ஆடி கிருத்திகை நாளன்று ஏன் மீன் குழம்பு வைத்தாய் என சண்டையிட்டு உள்ளார்.

 

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் அவர்களது இரு மகன்களும் அருகில் உள்ள துர்காவின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இரு சிறுவர்களும் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுதுதாய் துர்கா தலையில் படுகாயமடைந்து மயங்கிய நிலையிலும் தந்தை குமார் தூக்கிட்டு இறந்த நிலையிலும் இருந்துள்ளார்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கும், துர்காவை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதற்காக நடத்தப்பட்ட விசாரணையில் மீன்குழம்பு வைத்ததற்காக இரும்பு கம்பியால் மனைவியை தலையில் தாக்கிவிட்டு மனைவி துர்கா இறந்துவிட்டதாக நினைத்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Leave a Reply

Right Menu Icon