--- --:--:-- --

சீனாவின் வூகான் நகரில் மீண்டும் கொரொனா தொற்று பரவுகிறதா..?

10

ஓராண்டுக்கும் அதிகமான இடைவேளைக்குப் பிறகு சீனாவின் வூகான் நகரில் மீண்டும் பதற்றம் பரவுவதால் அதிர்ச்சி அடைந்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு உள்ள மக்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

கொரொனாவின் ஊற்றுக்கண் என்று வர்ணிக்கப்படும் வூகானில் ஒரு ஆண்டில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

 

அங்கு திங்கள் கிழமையன்று புலம்பெயர் தொழிலாளர்கள் ஏழு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் கொரொனா இருக்கிறதா என்பதை அறிய முழுமையான நியூக்ளிக் ஆசிட் சோதனை செய்யும் பணி துவங்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

சீனாவின் மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 12க்கும் மேற்பட்ட நகரங்களில் மக்களை வீடுகளுக்குள் முடங்கி கிடக்க உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon