--- --:--:-- --

மகாராஷ்டிரா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு..!

11

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரொனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கூடுதல் தளர்வுகளை மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

 

அதன்படி மாநிலத்தில் 25 மாவட்டங்களில் இரவு பத்து மணிவரை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட போதும் திரையரங்குகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.

 

அரசு தனியார் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடனும், அழகு நிலையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 விழுக்காடு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon