தமிழகத்தில் கொரொனா மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்பு…!
செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் கொரொனா மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்புள்ளதாக ஐஐடி வல்லுனர்கள் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக தாய்ப்பால் விழாவையொட்டி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர்பாபு மருத்துவத் துறை செயலாளராக இருந்தவர் பங்கேற்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கியை துவக்கி வைத்த பெண் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் 24 தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 18 மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.






